மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல்
பாறுக் ஷிஹான்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கின்ற நிகழ்வுகளின் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் தலைமையில் கட்சியின் தேசிய பொருளாளர் ரஹ்மத் மன்சூர் கல்முனை காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், கட்சியின் உதவிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் (MMC), கட்சியின் சூறா சபை செயலாளர் அல்ஹாஜ் யூ.எம். வாஹிட் (Rtd. ADE), கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், உயர்பீட உறுப்பினர் சப்ராஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், இறக்காம பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம். முஸ்மி, பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ. மாபிர், மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 16/09/2025 ம் திகதி மாலை 4.00 மணியிலிருந்து நிந்தவூர் அல்-அஸ்றக் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வில் பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும், மறைந்த கட்சியின் தவிசாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல்.எம். அப்துல் மஜீத் அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



