காரைதீவில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜூலை 42 வருட நினைவேந்தல்
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கையில் 1983 இல் இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 வது வருடத்தை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு இன்று (23) புதன்கிழமை மாலை காரைதீவில் நடைபெற்றது.
1983 கறுப்பு ஜூலை 42வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் நடாத்தியது.
காரைதீவு கடற்கரையில் நினைவுத்தூபி அருகில் நடைபெற்ற இப் பேரணியில் உணர்வார்கள் பலர் கலந்து கொண்டன.


