(  வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை மறுநாள் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது  என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க சுதா தெரிவித்தார்.

 உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் நாளை மறுநாள் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆலயபிரதம குரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது.

 கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக 15 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09ஆம் தேதி  சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெறும்.

வெள்ளிக்கிழமை கொடியேற்ற தினத்தன்று அன்னதானம்   காரைதீவு ஆலையடிவேம்பு  மடங்களில் சிறப்பாக நடைபெறும்.

உற்சவ காலங்களில் போக்குவரத்து மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.