இறைவனை எல்லா உயிர்களிலும் காண வேண்டும்!

தாந்தாமலையில் இகிமி.சுவாமி நீலமாதவானந்தா ஜீ

( தாந்தாமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)

இறைவனை எல்லா உயிர்களிலும் காண வேண்டும், எல்லா உயிர்களும் இறைவனைக் காண வேண்டும் .இந்த இரண்டும் இருப்பது ஒரு சமயத்தினுடைய முழுமையாகும்.

இவ்வாறு மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய “கடம்பன் மாலை”  பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழாவில் ஆன்மீக அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி. மஹராஜ் தெரிவித்தார்.

தாந்தாமலை முருகன் ஆலய தலைவர் இ. தட்சணாமூர்த்தி தலைமையில் இவ் இறுவெட்டு வெளியீட்டு விழா நேற்று  (20) திங்கட்கிழமை தாந்தாமலை முருகன் ஆலய சந்நிதானத்தில் நடைபெற்றது .

பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

முன்னதாக பாடல் வெளியீட்டுக்குழுத் தலைவர் க.சிவகுருநாதன் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.

அங்கு சுவாமி மேலும் உரையாற்றுகையில்..

மொழியை ஒரு மதமாக கொண்டாடினாலும் அதற்கு பெரும் இடர்பாடுகள் வருவது நிச்சயம் .

நம்முடைய சமயங்கள் நான்கு வேதங்களையும் பொதுவாக கொண்டு ஆகமங்களை சிறப்பாக கொண்ட ஒரு மாபெரும் தனித்துவமான இடத்தை பிடித்துக் கொண்டிருக்கின்ற ஒரு மதம் .

அந்த தனித்துவம் 

 இறைவனை எல்லா உயிர்களிலும் காண வேண்டும் எல்லா உயிர்களும் இறைவனைக் காண வேண்டும். இந்த இரண்டும் இருப்பது ஒரு சமயத்தினுடைய முழுமை என்று சொன்னார் .

ஒரு சமயம் எப்பொழுது முழுமை பெறும் என்றால் இறைவனை எல்லா உயிர்களிலும் காணத் தொடங்குவது. இதனை வந்திக் கிழவியினுடைய கதையிலிருந்து இதெல்லாம் படிக்கிறோம்.

 இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறார் 

இறைவனாக கண்டு தொழுங்கள். சிலைகளில் நீங்கள் இறைவனை வழிபட்டது போக இந்த உடல்களிலும் அதே இறைவன் இருக்கின்றான். இந்த உண்மையை நம்முடைய மதம் இந்த உலகத்திற்கு மிகத் தெளிவாக எடுத்து சொல்லி வைத்திருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் வெளியிட இருக்கும் இறுவெட்டுக்கு

கடம்ப மாலை என்ற பெயர் வைத்திருக்கிறார்கள் .

கடம்பன் என்பது முருகனுக்கு உரிய பெயர் . அம்பாளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. கதம்பம் என்பது கடம்பமரம் என்று ஒரு மரம் இருக்குது. அதனுடைய பூக்கள் அன்னை பராசக்தி உரியது. 

அந்த நாமங்களை பொறுத்தவரையில் அந்த நாமத்தில் இருந்து கடம்பன் என்று நாமம் வந்திருக்கலாம் என்று நான் நினைப்பதுண்டு. முருகப்பெருமானுடைய திவ்ய குணாதிசயங்களை சொல்லுகின்ற நல்ல சிறந்த பாடல்களை சிறப்பான கவிஞர் எழுதி இருக்கின்றார். அத்தோடு பாடல்கள் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதை நாம் கேட்டு மகிழ்வோம் இந்த நிகழ்வுக்கு ஒரு மாபெரும் ஒரு அழகான இடத்தில் நாம் இந்த வெளியீடு செய்கின்றோம். இந்தியாவில் நான் 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து இருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு மனோரம்மியமான இடத்தை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். தாந்தாமலை மனோரம்மியமான இடம். ஒரு அமைதியும் இவ்வளவு அழகும் கொட்டி கிடக்கின்ற ஒரு இடம் கண்டுபிடிப்பது கடினம். அந்த வகையில் முருகப்பெருமான் நமக்கெல்லாம் மாபெரும் அருளை செய்திருக்கின்றார். நாம் புண்ணியம் செய்தவர்கள் .இந்த திரு ஆலயத்தில் கூடி இருப்பதற்கு .உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல முருகப்பெருமானுடைய பேரருள் கிடைக்க பிரார்த்தித்து இந்த நிகழ்வு சிறப்பு அமைய என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

பிரபல தொழிலதிபர் சைவப்புரவலர் இ.ரஞ்சிதமூர்த்தி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.