திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளராக திரு.எஸ்.திவாகரன் இன்று (26) கடமை ஏற்றுக் கொண்டார்
அரச முகாமைத்துவ சேவையாளராக அரச பணியில் இணைந்து கொண்ட இவர் பல்வேறு அரச திணைக்களங்களிலும் கடமையாற்றியுள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் முகாமைத்துவ சேவை தரம் 1இற்கு பதவி உயர்த்தப்பட்ட இவர் கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளரினால் திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது கடமையேற்பு நிகழ்வில் அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் தலைவரும் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளருமான ஏ ஜி முபாரக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
அரசு முகாமைத்துவ சேவையில் மிகுந்த அனுப்பவும்இ திறமையும் கொண்ட இவர் அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் கல்முனை பாண்டிருப்பை வசிப்படாகவும் உள்ளார்.