24 வது நாளில்  வாகரையில்  யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்!

( வி.ரி.சகாதேவராஜா) 

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள்  இன்று சனிக்கிழமை 24வது நாளில்   04 மாவட்டங்களை கடந்து மட்டு.மாவட்டத்திலுள்ள வாகரையை அடைந்தனர்.

.

யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 23தினங்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு  திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களைக் கடந்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரவேசித்துள்ளனர்.

வெருகல் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் வெள்ளி பூஜையில் கலந்து கொண்ட குழுவினர் இன்று வாகரையை அடைந்தனர்.

 நாளை (25) ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை கறுவாக்கேணியை வந்தடைவர்.

மழை வெயிலுக்கு மத்தியில் சுமார் 78 அடியார்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

எதிர்வரும்  ஜூலை மாதம் 26 ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடைவர்.