இந்தியாவிலிருந்து மே 28 இல் உப்பு இறக்குமதி!

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கொள்கலன் எதிர்வரும் புதன்கிழமை (மே 28) இலங்கையை வந்தடையும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டமான சூழ்நிலையே உப்பு இறக்குமதியில் தாமதத்திற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புத்தளம் உப்பு உற்பத்தித் தொழிற்சாலைக்கு நேற்று (19) விஜயம் செய்து ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும், சில குழுக்கள் அதிகளவில் உப்பை கொள்வனவு செய்வதனால், சந்தைக்கு கட்டுப்படுத்தப்பட்ட வகையில் உப்பை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ARV LOSHAN NEWS