(வி.ரி. சகாதேவராஜா)

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் 7:7 என்று  சமநிலையில் தெரிவாகியுள்ளது.

அதைவிட சுயேட்சை குழு ஒன்று 02 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

16 உறுப்பினர்களைக் கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச சபையில் ஆட்சி அமைக்க இரு அணிகளும் சுயேட்சை அணியை நாடவேண்டிய நிலையில் உள்ளது.

ஆதலால் அங்கு சுயேட்சை அணி துரும்புச் சீட்டாக மாறியுள்ளது. உப தவிசாளர் உள்ளிட்ட வலுவான கோரிக்கை முன்வைக்க இடமிருக்கிறது.

ஆலையடிவேம்பு சபைக்கான தேர்தல் முடிவின் படி 

தமிழரசுக் கட்சி  7 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி 7 ஆசனங்கள்

சுயேச்சைக் குழு 1  – 2 ஆசனங்கள்.