திருக்கோவிலில் களைகட்டிய மாற்றத்திற்கான மேதின ஊர்வலம் 

( வி.ரி. சகாதேவராஜா)

 சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு

திருக்கோவில் பிரதேசத்தில் மாற்றத்திற்கான மேதின ஊர்வலம் இன்று (1)  வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

திருக்கோவில் பிரதேச சபையில் போட்டியிடும் சுயேட்சை குழு ஒன்றின் தலைவர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான ஆதரவாளர்கள் மேற்கொண்ட நடைபவனி தம்பிலுவில் முனையூர் சந்தியில் ஆரம்பித்தது.

அப் பேரணி பதாதைகளை தாங்கி கோஷங்களை எழுப்பிய வண்ணம் திருக்கோவில் மணிக்கூட்டு சந்தியை சென்றடைந்தது.

பின்னர் அங்கிருந்து விநாயகபுரம் பிரதானவீதியூடாக கோரைக்களப்பு சமாதிபிள்ளையார் ஆலயம் திருக்கோவில் சென்றடைந்தது.

தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சவால்கள் தொடர்பாக அங்கு கோஷம் எழுப்பினர்.

 அவர்களின் சுபீட்சமான வாழ்வுக்கு அரசாங்கம் பல வேலை திட்டங்களை முன்வைத்து நடைமுறைப் படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.