பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு (17) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.
பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கல்முனை நகர ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பிரதம கதீப் அஷ்ஷேஹ் அல்-ஹாபிழ் எம்.எச்.எம்.இர்பாத் (ரஷாதி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
குறித்த இப்தார் நிகழ்வில் பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.















