கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் தொடர் நினைவுப் பேருரை – 2025.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொடர் நினைவு பேருரை – 2025” நிகழ்வில் அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ அரங்கு மார்ச் 2, 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9:30 மணிக்கு கமு/ கமு/கார்மேல் பற்றிமாக் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் நடைபெற உள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வண. அருட்சகோதரர் S.E. ஹெஜினோல்ட் (FSC) அவர்கள் கலந்துகொள்கிறார்.
நிகழ்விற்கு திரு. T.J. அதிசயராஜ், பிரதேச செயலாளர் (கல்முனை வடக்கு) அவர்கள் தலைமை வகிக்கிறார்.

நிகழ்ச்சியின் நினைவு நாயகரை திரு. உமா வரதராஜன் (எழுத்தாளர்) அவர்கள் அறிமுகம் செய்து வைக்கிறார்.
இந்நிகழ்வில் நினைவு பேருரையை “சர்வதேச தரத்திற்கு ஈடுகொடுக்க முடியாத வகையில் இலங்கையின் கல்விச் செயன்முறை நகர்கிறதா?” எனும் தலைப்பில் திரு. கி. புண்ணியமூர்த்தி, ஓய்வு நிலைப் பீடாதிபதி, கல்வியியல் கல்லூரி அட்டாளைச்சேனை அவர்கள் வழங்குகிறார்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார் மாகாணப் பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் திரு. ச. நவநீதன் அவர்கள்.

பேருரையாளர் அறிமுகத்தை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு. ச. நவநீதன் அவர்களும் நன்றி உரையை திரு. பிரபாகரன், கலாசார உத்தியோகத்தர்கள் அவர்களும் வழங்குவர்.

You missed