பெரும்போகத்தில் சோள பயிர்ச்செய்கைக்கு அவசியமான யூரியா உரத்தை, மொனராகலை, குருநாகல் மற்றும் அநுராதபுரம் முதலான மாவட்டங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த 3 மாவட்டங்களுக்கும், ஒரு இலட்சத்து 75 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரம் விநியோகிக்கப்படுவதாக விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் அவசியத்தன்மைக்கு அமைய, அடுத்த தொகை யூரியா உரத்தை விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஹெக்டேயர் சோள பயிர் நிலத்துக்காக, 200 கிலோகிராம் யூரியா உரம் வழங்கப்படுகிறது.

இதற்கமைய, 50 கிலோகிராம் யூரியா உர மூடை ஒன்று, கமநல சேவை திணைக்களம் ஊடாக, விவசாயிகளுக்கு 15,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.