கல்முனை காணி மாவட்ட பதிவகத்தில் இன்று சரஸ்வதி பூஜை சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை காணி மாவட்ட பதிவகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரும் மேலதிக காணி பதிவாளருமான திரு. K. சிவதர்ஷன் தலைமையில் இந்நிகழ்வு அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விழாவில் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் பொன். செல்வநாயகம் அவர்கள் பிரசித்த நொத்தாரிசு சார்பில் கலந்து கொண்டார். சட்டத்தரணி உமா தாசன் அவர்கள் கல்முனை சட்டத்தரணி சார்பில் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இன்றைய பூஜை நிகழ்வை விழா ஏற்பாட்டு குழுவின் தலைவர் P.N. கிரிசாந்த் சிறப்பாக ஒழுங்கமைப்பு செய்திருந்தார்.

You missed