(ஷனா)

மருதமுனை மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசல் மத்ரஸா மாணவர்களின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வீதி ஊர்வலம் (26.08.2026) காலை மருதமுனையில் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்ந்து ஸலவாத் பாடியவாறு வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

இதன்போது, வீதிகளில் பொதுமக்கள் மாணவர்களுக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், மத்ரஸா முஅல்லிம்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.