செல்லையா பேரின்பராஜா

2026 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் கிழக்கு  மாகாண விவசாயத் திணைக்களத்தினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள துரைவந்தியமேடு கிராமத்தில் பத்து இலட்சம் ரூபா செலவில்  புனரமைக்கப்பட்ட ஐம்பது மீற்றர் நீளமான  விவசாய வீதியின் திறப்பு விழா சம்மாந்துறை பிரதேச பிரதி விவசாயப் பணிப்பாளர்.எஸ்.பரமேஸ்வரன் தலைமையில்  நேற்று 07.08.2026 வெள்ளிக் கிழமை சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி,  கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.றினூஸ்,  அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் டீ.எம்.எஸ்.திசாநாயக்க , கல்முனை வடக்கு பிரதேச செயலக சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வே.அரவிந்தன்,  சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்  செ. குமுதராஜ் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.