விசேட கல்வி அலகு மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்திய திருக்கோவில் வலய கண்காட்சி.
(செல்வி வினாயகமூர்த்தி)
திருக்கோவில் கல்வி வலய விசேட கல்வி அலகு மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில் இன்று செவவாய்கிழமை (04) பாலர் பாடசாலை மற்றும் விசேட கல்விக்கான உதவிக் கல்வி பணிப்பாளர் எஸ் .விவேகானந்தராஜா அவர்களின் ஒருங்கிணைப்பில் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் தலைமையில். இடம்பெற்றது.
திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட. விசேட கல்வி அலகு மாணவர்களைக்கொண்ட பாடசாலைகளான கமு/திகோ/பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயம்,கமு/திகோ/ கலைமகள் வித்தியாலயம்,கமு/திகோ/இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் விசேட அலகுகளில் 46 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.இம் மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் முகமாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் வகையில் ஒழுங்கு செய்திருந்தனர்.
மேலும் இக்கண்காட்சியில் இ.எம்.ஜி.ருசாந்தன் இணைப்பாளர் ,டெஃப்லிங்க் மெதடிஸ்ட் திருச்சபை மற்றும்.எஸ் ,ஜனார்த்தன் முன்னைனாள் மாகாண கல்விதிணைக்கள விசேட அலகுக்குரிய இணைப்பாளரும் ,தேசியகல்வியல்கல்லூரி விரிவுரையாளர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள்,சமூகமட்ட பிரதிநிதிகள் ,கல்வியலாளர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் ,மாணவர்என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
























