மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள சங்கர்புரம் கிராமத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 23.07.2026 வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகவும் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் திருமதி சுகன்யா பிரகீத் அவர்கள் விசேட அதிதியாகவும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி உறுப்பினர் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மா மரங்களிள் நடுகைக்கான தெரிவு, மா மரங்களை கத்தரித்தலும் பயிற்றுவித்தலும், பசளையிடல், உறையிடல் மற்றும் வருடம் முழுவதும் விளைச்சலை பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் என பல விடயங்கள் விவசாய போதனாசிரியர்களால் செய்து காட்டப்பட்டு தெளிவூட்டப்பட்டன.
பல புதிய விடயங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருந்ததுடன் அவற்றை அவர்களது தோட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
விவசாயிகளின் தேவைகளை கேட்டறிந்த பிரதி விவசாய பணிப்பாளர் அவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் வழங்கியமையிட்டு விவசாயிகள் பிரதி விவசாய பணிப்பாளருக்கு தமது நன்றியை தெரிவித்தனர்.














