செல்லையா பேரின்பராசா
கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை இன்று 22.07.2026
புதன்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சைவப்புலவர் மார்க்கண்டுபிள்ளை கணநாதன் அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந் நிகழ்வுகளை இரண்டாம் வருட ஆங்கிலகல்விநெறி ஆசிரிய மாணவி தனுசாஜினி கவிராஜ் முன்னிலைப்படுத்தினார்
நிகழ்வின் ஆரம்பத்தில் சுந்தரரின் திருவுருவப் படத்திற்கு கலாசாலை சமூகத்தினர் மலர் தூவி வழிபட்டனர். ஆச்சரியமாணவிகள் திருத்தொண்டத் தொகை பாடினர்
சுந்தரமூர்த்தி நாயனார் பற்றிய உரையினை ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி கௌசிகா நிரோஜன் ஆற்றினார்
சுந்தரமூர்த்தி நாயனார் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிய உரையினை விரிவுரையாளர் கார்த்திகேசு கமலநாதன் ஆற்றினார்.
அதிதி அறிமுக உரையினை தமிழ்ப்பாடநெறி விரிவுரையாளர் இராஜேந்திரன் நிமல் ஆற்றினார்.
கலாசாலையின் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் நிறைவுரை ஆற்றினார்.
அதிதி பேச்சாளர் கலாசாலை முகாமைத்துவக் குழுமத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.







