செல்லையா பேரின்பராசா 

ஆசிரியர் கல்விப் போக்குகள் – இந்திய உள்ளடக்கங்ளை முன்னிறுத்திய ஒரு அனுபவப் பார்வை என்ற பொருளில் அமைந்த சிறப்புரை 20.07.2026 திங்கள் காலை 8.30 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது.

கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியின் கல்வியியல் துறைத் தலைவர் முனைவர் ஜி. தமிழ்வாணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வுகளை இரண்டாம் வருட  ஆரம்பக்கல்விநெறி ஆசிரிய மாணவி ஜெயராணி தினேஷ் முன்னிலைப்படுத்தினார்

ஆசிரியம் பற்றிய காணொளியினை ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி கௌசிகா நிரோஜனால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

அதிதி அறிமுக உரையினை கலாசாலை அதிபர் ஆற்றினார்.

அதிதி பேச்சாளர் கலாசாலை முகாமைத்துவக் குழுமத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.

நன்றி உரையினை பிரதிஅதிபர் த.கோபாலகிருஷ்ணன் ஆற்றினார்.