முதியோர்கள் தங்கள் வீடுகளில் வசிக்க குறைந்த பட்ச வசதிகள் மற்றும் சுகாதாரப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.
முதியோர்கள் தங்களது வீட்டிற்குள் வாழ்வதற்குத் தேவையான வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல், முதியோர்களின் நலன்புரி மற்றும் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கான பங்களிப்பினை வழங்குதல் , குடும்பத்திற்குள் முதியோர்களைப் பராமரித்தல் /பாதுகாத்தல் போன்ற நோக்கமாக வகுக்கப்பட்டுள்ள தேசிய திட்டத்திற்கமைய முதியோர்களுக்கு மெத்தைகள் மற்று நடை பழகும் walker , commode என்பன வழங்கி வைக்பட்டன.
இந் நிகழ்வில் கணக்காளர் நிருவாக உத்தியோகத்தர்,முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ,முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் உட்பட முதியவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், பெரிதும் துன்பப்பட்டு வாழ்ந்துவரும் முதியோர் குழுவினர் எமது சமூகத்திற்குள் வாழ்ந்துவருகின்றனர். இந்த முதியோர் சமூகத்திற்கு ஆறுதல் அளிப்பதும் அவர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச வசதிகளை வழங்குவதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்த திட்டம் அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய கொள்கை கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள “வீடுகளில் முதியோர் பராமரிப்புக்கான அடிப்படை வசதிகளை வழங்குதல்” என்பதன் கீழ் செயல்படுத்தப்படுகிறது.



