வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை முருகனாலயத்தில், நேற்று (05.07.2026) கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களால் ஆலய வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

வருடாந்தம் கதிர்காம பாதயாத்திரை மற்றும் ஆலய உற்சவத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகை தருவதால், அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஆலயச் சூழலை தூய்மைப்படுத்தும் நோக்கில் இச்சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிரமதானப் பணியுடன் பக்தர்களுக்கான அன்னதான நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த சமூகப் பணியில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, ஆலயச் சூழலை சுத்தமாகவும் பக்தர்கள் வழிபாட்டிற்கு ஏற்றதாகவும் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.