மட்டக்களப்பு மாவட்ட , மக்கள் வங்கி பிராந்திய காரியாலயமும் , மாவட்டத்தில் உள்ள மக்கள் வங்கி கிளைகளும் இணைந்து நடத்திய “தொழில் முனைவோர் உதயம் வர்த்தக கண்காட்சி 2026” இன்று 26.06.2026 மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் திரு.K. கோடீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இன்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோத்தர் திரு.B. கோகுலராஜன், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட விற்பனை மேம்படுத்தல் உத்தியோகத்தர் திரு. கோகிலதாசன் அவர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட மேற்பார்வையாளர் திரு எஸ். வினோத் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததுவுடன் நிகழ்வுக்கு மக்கள் வங்கியின் உதவி பிராந்திய முகாமையாளர்களான திரு என் .தினேஷ்குமார் மற்றும் திரு .மோகனதாசன் மேலும், மக்கள் வங்கியின் சட்ட உத்தியோத்தர், மாவட்டத்திலுள்ள மக்கள் வங்கி கிளைகளின் முமையாளர்களும் உத்தியோகத்தர்களும் தொழில் முயற்சியாளர்களும் சுகாதாரத் திணைகள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கண்காட்சி கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் அதிதிகளின் சிறப்புரைகளும் இடம் பெற்றன மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்ச்சியாளர்களுக்கான கடன் உதவி தொகைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இக்கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உற்பத்தி பொருட்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளை மையப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டதுடன் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு சந்தை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.