(அஸ்லம்)
தலைநகரில் தனிச் சிறப்புடன் இயங்கும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் 2026-2027 ஆம் ஆண்டுகளுக் கான நிர்வாகிகள் தெரிவுக் கூட்டம் ஞாயிறன்று (21) அதன் நிறுவுனர் ராதா மேத்தா தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு-13 புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பின்வருவோர் நிர்வாகிகளாக நியமனம் பெற்றனர்.
தலைவி: திருமதி சிவகெளரி (சுடரி)
உபதலைவி: திருமதி ஷிபானியா
செயலாளர் : திருமதி தமிழ்செல்வி (தென்றல்)
உப செயலாளர்: திருமதி ஸ்ரீமதி
பொருளாளர்: திருமதி சூரியகுமாரி
இலத்திரனியல் ஊடக பொறுப்பாளர்: செல்வி பிரபா
இவர்களுடன் ஏனைய இணைப்பாளர்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.


