36வது தேசிய இளைஞர் கழக விளையாட்டுப் போட்டியின் அம்பாறை மாவட்ட மட்ட பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி இறக்காமம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தை வெற்றிகரமாகப் பெற்றுக்கொண்டது.
போட்டியில் திறமையுடன் பங்கேற்று இவ்வெற்றியைப் பெற்ற வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வாழ்த்துகள்! மேலும் பல வெற்றிகளைப் பெற்று மாவட்டத்திற்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்.
