50வது தேசிய விளையாட்டு விழாவின் அம்பாறை மாவட்ட மட்ட கூடைப்பந்து போட்டிகள் 13.06.2026 அன்று கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றன.
இப்போட்டிகளில் கல்முனை வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்று மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.
மாகாண மட்டத்திற்குத் தெரிவாகியுள்ள அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும், அடுத்த கட்டப் போட்டிகளிலும் சிறந்த வெற்றிகளைப் பெற வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


