(அஸ்லம் எஸ்.மௌலானா)
கிழக்கு மாகாணத்தில் உள்ள பொது நூலகங்களில் பணியாற்றும் நூலகர்களின் நலன் கருதி கிழக்கு மாகாண நூலகர் சேவைச் சங்கம் எனும் பெயரில் அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது பொதுக்கூட்டம் நேற்று புதன்கிழமை (29) சாய்ந்தமருது பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் நூலகர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது சங்கத்தின் உத்தியோகப்பூர்வ யாப்பு விதிகள் அங்கீகரிக்கப்பட்டதுடன் பல்வேறு தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அத்துடன் நடப்பு ஆண்டுக்கான நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவராக ஏ.சி.அன்வர் சதாத்,
செயலாளராக ஏ.எல்.எம். முஸ்தாக்,
பொருளாளராக ஏ.எம். முனவ்வர்
உப தலைவராக எப். ரிஹானா ஹாலித் உதவிச் செயலாளராக ஏ.பி எம். சர்ஜூன், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ரி. ராணி, என்.ஏ.எப். பௌமியா, எம். வரதன் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக எஸ்.எம்.ஆர். அமீனுடீன் (அம்பாறை), கே. ருத்திரன் (மட்டக்களப்பு) எம். மசூத் (திருகோணமலை) ஆகியோர் தெரிவாகினர்.


