கல்முனை:
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய “வைகாசி மாத பௌர்ணமி கலை விழா – 2026” நிகழ்வு, கடந்த 30.05.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. தி. ஜே. அதிசயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

நிகழ்ச்சி நிரல் விபரம்:

மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், தமிழ் மொழி வாழ்த்து பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் பின்வருமாறு இடம்பெற்றன:

  • வரவேற்பு நடனம்: ஸ்ரீ நர்த்தனாலயா கலை மன்றம் (கல்முனை)
  • வரவேற்பு உரை & தலைமை உரை: பிரதேச செயலாளர் (கல்முனை வடக்கு)
  • குழு நடனம்: லாஸ்ய ருத்ராலயா நடனப்பள்ளி (சேனைக்குடியிருப்பு)
  • வாள் நடனம்: ஸ்ரீ சிவாலயா கலை மன்றம் (கல்முனை)
  • குழு நடனம்: நிருத்தன நேஷ்த்ரா நடனப்பள்ளி (பாண்டிருப்பு)
    இவற்றுடன் ஆங்காங்கே இனிமையான பாடல் நிகழ்வுகளும் இடம்பெற்று விழாவை மேலும் சிறப்பித்தன. இந்நிகழ்வின் நன்றியுரையினை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் வழங்கினார்.
    முழு நிகழ்வையும் திரு. N. பவதாகர் மற்றும் திரு. R. நிஜந்தன் ஆகியோர் இணைந்து மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கினர். இக்கலை விழாவில் பெருந்திரளான பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.