செளவியதாசன்

பௌத்த மதத்தின் முக்கிய புனித தினங்களில் ஒன்றான வெசாக் தினத்தை முன்னிட்டு, பெரிய நீலவணை விசேட அதிரடிப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெசாக் தின கொண்டாட்டங்கள் இன்று சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அழகிய வெசாக் தோரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு வர்ண வானவேடிக்கைகளும் பொதுமக்களின் பார்வைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், வருகை தரும் மக்களுக்காக ஐஸ்கிரீம் தன்சல் உள்ளிட்ட பல்வேறு தான நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வுகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு வெசாக் தின கொண்டாட்டங்களை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர்.