செல்லையா பேரின்பராசா 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் அனுசரணை மற்றும் வழிகாட்டலின் கீழ்  துறைநீலாவணையில் இயங்கும்அறநெறிப் பாடசாலைகள்  , ஆலயங்கள் இணைந்து நடாத்திய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரை  கதூகலம் நிகழ்வு 10.05.2026 துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய முற்றத்தில் இடம்பெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜயந்தா அரங்கன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் பிரதம அதிதியாகவும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன் கௌரவ அதிதியாகவும் , தொழில்நுட்ப உத்தியோகத்தர்  இ.

சுதர்சன், ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலய பரிபாலனசபைத் தலைவர் மு.இராஜகோபால், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபைத்  தலைவர் சா.புஸ்பராசா,  கலாச்சார உத்தியோகத்தர்கள் திருமதி கௌரிஅறநெறிப் பாடசாலைகளின் அதிபர்களான க.சுரேந், சோ.சந்திரகுமார்,  ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் அறநெறிப் பாடசாலை  மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதுடன்,  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப்பொதிகள் மற்றும் அறநெறிப் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் , பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.