தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக கூட்டணி 71, அதிமுக கூட்டணி 54 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளன.

அதிமுக, திமுக மாறி மாறி 2ஆம் இடத்துக்கு போட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் அவரைப் பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலை வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பலரும் தத்தமது தொகுதிகளில் பின்தங்கியுள்ளனர். 

தமிழ்நாட்டில், 76 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுகவையும் 54 ஆண்டுகள் பழமையான அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளி மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வயதான ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இறுதி முடிவுவின் பிக்கத் கூட்டாச்சியா தனித்து ஆட்சியா என்பது முடிவாகும் வாக்கு எண்ணும் பணி தொடர்கிறது