திருக்கோவில் கல்வி வலய பொத்துவில் கோட்டத்தில் பல்கலைக்கழத்திற்குத் தெரிவான மாணவர்கள் கெளரவிப்பு.

இம்முறை நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்றுப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான திருக்கோவில் கல்வி வலயத்தின் பொத்துவில் கோட்டத்திற்குட்பட்ட கமு/திகோ பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயம்
,கிமு/திகோ ஊரணி சரஸ்வதி தமிழ் மகாவித்தியாலயம்,
கமு/திகோ தாண்டியடி. விக்னேஸ்வரா தமிழ் மகாவித்தியாலயம் மற்றும்
கமு/திகோ/கோமாரி மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து தெரிவான மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும், அதிபர்கள்,ஆசிரியர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வானது பொத்துவில் கோட்டக் கல்வி அதிகாரி திரு.தியாகராசா உதயகுமார் அவர்களின் தலமையில் கோமாரி மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொத்துவில் கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள்,மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன், அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு பொத்துவில் பிரதேச பொறுப்பாளர் திருமதி,ஸ்ரீகாந்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் என பலரின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.