இன்று கல்முனையில் உலக வாய்ச்சுகாதார தின நிகழ்வு 

( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை ஆதார வைத்தியசாலையில் உலக வாய்ச் சுகாதார தின நிகழ்வு  பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் இன்று (8) புதன்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

உலக வாய்ச் சுகாதார தினம் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி இன்று ஆகும்.

” வாயின் மகிழ்ச்சி.. வாழ்வின் மகிழ்ச்சி..” எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு வைத்தியசாலை பல்சுகாதாரப் பிரிவின் ஏற்பாட்டில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பல் வைத்திய நிபுணர் மருத்துவர் ரி.மேகநாதன், மருத்துவர் ஐஎம்ஐ.முன்சிவ் , பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் தாஹிறா ஆகியோர் விசேட உரை நிகழ்த்தினார்கள்.

மருத்துவர் எஸ் எஸ் யூ.ஷிபா வரவேற்புரை நிகழ்த்த, திருமதி சுதாநந்தி நன்றியுரையாற்றினார்.