K.S. கிலசன்
தேசிய ரீதியில் கொழும்பில் நடைபெற்ற 15வது ஷோட்டோகன் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில்
கல்முனையை சேர்ந்த M.சூரியவர்ஷன் சிறப்பாக விளையாடி முதலாம் இடத்தைப் பெற்று கல்முனை பற்றிமா கல்லூரிக்கும் கல்முனை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இப்போட்டி 2026 ஏப்ரல் 4ஆம் திகதி கொழும்பிலுள்ள சென்.ஜோசப் உள்ளக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது
M. சூரியவர்ஷன் அவர்கள் கராத்தேயில் சாதனைகள் பல படைத்த S. பாலுராஜ் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்றுவிப்பின் கீழ் 12 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு 1ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் மற்றும் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் ஆகியோர் கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையின் முதல்வரினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.



