கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாடக தினம்
செல்லையா பேரின்பராசா.
மார்ச் 27 உலக நாடக தினத்தை மையப்படுத்தியதாக கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆரம்பக் கல்வி மன்றம் செம்முகம் ஆற்றுகைக் குழுவினருடன் இணைந்து நடாத்திய நாடக விழா – 26.03.2026 வியாழக்கிழமை இக் கலாசாலையில் இடம்பெற்றது.
இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செம்முகம் ஆற்றுகைக்குழு நிறுவுனர் கறுப்பையா சத்தியசீலன் அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந் நிகழ்வுகளை இரண்டாம் வருட வர்த்தகநெறி ஆசிரிய மாணவர் எம்.எஸ் ஹீபத்துல்லா முன்னிலைப்படுத்தினார்
வாழ்வை வளப்படுத்தும் அரங்காற்றுகை என்ற பொருளில் விரிவுரையாளர் திருமதி ஜீவாஜினி கேசவன் சிறப்புரை ஆற்றினார்.
அதிதி அறிமுகவுரையை விரிவுரையார் சந்திரிகா தர்மரட்ணம் ஆற்றினார்.
அவளின் பயணம் என்ற தொனிப் பொருளில் ஓரங்க நாடகமும் குழந்தை ம. சண்முகலிங்கத்தின்
கூடி விளையாடு பாப்பா என்ற சிறுவர் அரங்க ஆற்றுகையும் நடைபெற்றது. கலாசாலையின் ஆசிரிய மாணவர்கள் செம்முகம் ஆற்றுகை குழுவினருடன் இணைந்து நாடகங்களில் நடித்தனர்
கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் பிரதிபலிப்பு உரையை வழங்கினார்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் நிறைவுரை ஆற்றினார் ஆசிரியமாணவர் சராப்தீன் நன்றியுரை ஆற்றினார் அதிதி பேச்சாளர் கலாசாலை முகாமைத்துவக் குழுமத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.





















