சிறப்பாக நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு
“”””””””””””””””””””””””””””””””””””””
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் யாழ் மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் தொடர்பான கருந்தரங்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூட மண்டபத்தில் இன்று 07.03.2026 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு. ய. அனிருந்தனன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங் அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் சிறப்பு அதிதியாக யாழ்ப்பாண மாவட்டச் செயலக மேலதிக செயளாலர் திரு. கயிலாயபிள்ளை சிவகரன் அவர்களும் , சிறப்புரையினை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள நிர்வாகம் மற்றும் அறநெறி உதவிப்பணிப்பாளர் திருமதி அனந்தா அம்பிகைபாகன் அவர்களும் உரையாற்றிக் கலந்து சிறப்பிதார்கள்.
வளவாளர்களாக அபிவிருத்தி உத்தியோகதர் திரு. கு. ஜெயராஜி மற்றும் சைவப்புலவர் திரு. யோ. கஜேந்திரா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். அனைத்து யாழ் மாவட்ட அறநெறிப்பாடசலை ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.














