துறைநீலாவணையில் ஆங்கில மொழிமூல முன்பள்ளி திறப்பு விழா – 06.03.2026

செ. பேரின்பராசா

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் நடாத்தப்படவுள்ள ஆங்கில மொழி மூல முன்பள்ளி கூடத்தின் திறப்பு விழா நாளை 06.03.2026 வெள்ளிக் கிழமை துறைநீலாவணையில் இடம்பெறவுள்ளது.

இப் பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஆர்.இர்ப்கா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன்,  போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இப் பிரதேச சபையின் செயலாளர் சுப்பிரமணியம் சுபராஜன், களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கவில பண்டார,  சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகநேசன்,  இப் பிரதேச சபையின் உப தவிசாளர் ஆலையப்போடி வசீகரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதே வேளை பல வருட காலமாக சேதமடைந்து பாவனைக்குதவாமல் காணப்பட்ட துறைநீலாவணை அண்ணா சனசமூக நிலைய கட்டிடத்தை புனரமைத்து தருமாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்  உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன்  இப் பிரதேச சபையின்  தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்ஜிடம் விடுத்த கோரிக்கைக்கமைய இக் கட்டிடம் புனரமைப்பு செய்யப்படு,  துறைநீலாவணையின் நாளைய சந்ததியின் நலன் கருதி ஆங்கில மொழி மூல முன்பள்ளியை ஆரம்பித்தமைக்கு துறைநீலாவணை மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றனர்.