சேவை நலன் பாராட்டும் பிரியாவிடை வைபவமும்! திருமதி. கலா சபாரெத்தனம் (பி.மு.உ)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி. கலா சபாரெத்தினம் அவர்களுக்கு இன்று (3)  சேவை நலன் பாராட்டு விழா இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் எம். ஜீவராஜ், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருமதி. கலா சபாரெத்தினம் 1992 ஆம் ஆண்டு இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் இலிகதராக தனது அரச சேவையை தொடங்கினார்.

அதன் பின்னர் மட்டக்களப்பு தொழில் திணைக்களத்துக்கு மாற்றம் பெற்ற இவர் அங்கு 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து முறையே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றம் பெற்ற திருமதி. கலா சபாரெத்தினம் இறுதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 8 ஆண்டுகள் பிரதம முகாமைத்துவ சேவை உத்தராக கடமையாற்றி இன்று ஓய்வு பெறுகின்றார்.

திருமதி. கலா சபாரெத்தினம் ஆரம்பம் முதல் கொண்டு மிகுந்த சாதுரியமிக்கவராகவும் அரசு சேவையின் மீது அதீத ஈடுபாடு கொண்டவராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

இதேவேளை பிரதேச செயலாளர் திருமதி. கலா சபாரெத்தினம் அவர்களை வாழ்த்திப் பேசுகையில் அனைத்து உத்தியோகத்தர்களுடனும் சிறந்த இணக்கப்பாட்டுடன் கடமையாற்றி, தனது கடமைகளை சிரமம் இன்றி கொண்டு செல்வதில் தனக்கு உறுதுணையாக அவர் இருந்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.