பஸ் கன்டெக்டர்களாக பெண்கள் நியமனம்.!

இலங்கை போக்குவரத்து சபை (CTB) பஸ் நடத்துனர்களாக வரலாற்றில் முதன்முறையாக
பெண்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 20 பெண்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (06) மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்கு புதிய சீருடை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.