கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு கலைஞர் சுவதம் விருது

கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு கலைஞர் சுவதம் விருது இன்று வழங்கிவைக்கப்பட்டன.

  1. திரு..ஏ.பிரமின் சர்மா – வாத்தியத்துறை
  2. செல்வி.லோஜிகா கமலநாதன் – நடனத்துறை
  3. திருமதி.தனுசிதா ராதீஸ் – நடனத்துறை ஆகியோரே விருதுகளைப் பெற்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற விருதுகள் வழங்கும் இந் நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலானர் ரி.ஜே.அதிசயராஜ், மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம். றின்ஸான், கல்முனை வடக்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர்; தயாஜினி ஆகியோர் கலந்து சிறப்பித்த்னர்.