( வி.ரி. சகாதேவராஜா)

தமிழர்களின் தைப்பூச திருநாளையொட்டி வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலயத்தின் வருடாந்த  புதிர் எடுத்தலுடன் கூடிய தைப்பூசத் திருவிழா  இன்று (1)ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

தைப்பூசம் தமிழர் மரபில் மிகச் சிறப்பு வாய்ந்த ஆன்மிகத் திருநாளாகும். தை மாதத்தில் பூச நட்சத்திரம் கூடும் ( 01) ஞாயிற்றுக்கிழமை இன்று இந்த விழா கொண்டாடப்பட்டது.

தைப்பூசம் குறிப்பாக முருகப்பெருமானை மையமாகக் கொண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பார்வதித் தாயார் முருகனுக்கு வேலாயுதம் வழங்கி, அவர் அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய தினமே தைப்பூசமாக கருதப்படுகிறது.அதாவது தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய நன்னாள் இது.

இந்த நாளில் பக்தர்கள் உடல், மன தூய்மையுடன் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.

தைப்பூசத்தில் தான் இலங்கை குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மக்கள் புதிர் எடுப்பது  வழக்கம்.

அதற்கமைய, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தாக்கள் உள்ளிட்ட கப்புகனார் நிர்வாக சபை உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்மனின் வயலிற்கு சென்று புதிர் எடுத்து ஊர்வலமாக வந்து ஆலயத்திலே அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர் .

இதேவேளை பக்தர்களும் அங்கு சென்று புதிர்களை பெற்றுக் கொண்டதுடன் விசேட பூஜை வழிபாட்டிலும் கலந்து கொண்டார்கள்.