(அஸ்லம் எஸ்.மெளலானா)
ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட எழுத்தாளருமான கலாபூசணம் ஏ. பீர் முகம்மது, நீண்ட காலமாக சேகரித்து வந்த பெறுமதியான நூல்களில் ஒரு தொகுதியை சாய்ந்தமருது மழ்ஹருஷ் ஷம்ஸ் மகா வித்தியாலய நூலகத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூலகர் ஏ.எம். முஸ்தாக், பாடசாலை அதிபர் ரிப்கா அன்சார் மற்றும் உதவி அதிபர்கள், பாடசாலை நூலக பொறுப்பாசிரியை உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
எதிர்காலத்தில் ஏனைய பாடசாலை நூலகங்களுக்கும் இவ்வாறான நூல்களை அன்பளிப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக கலாபூசணம் ஏ. பீர் முகம்மது இதன்போது குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற பின்னரும் கல்வி மற்றும் இலக்கியத் துறைகளில் மிகவும் ஆர்வத்துடன் இயங்கி வருகின்ற கலாபூசணம் ஏ. பீர் முகம்மது போன்றவர்களின் இத்தகைய பங்களிப்புக்கள், பாடசாலை மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும் மாணவர் சமூகத்தின் அறிவுப் பசிக்கும் பெரும் துணையாக அமையும் என்று நூலகர் ஏ.எம். முஸ்தாக் பாராட்டுத் தெரிவித்தார்.
