*கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல்  சீரில்லை* மாநகரசபையின் பதில் என்ன?*

(கல்முனை ஸ்ரீ)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் முறையாக குப்பைகள் அகற்றப்படாமையினால் பொது மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் துர்நாற்றம் வீசுவதால் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கல்முனை 1, 2, 3ம் குறிச்சிகளில் குப்பைகள் அகற்றுவது முறையாக இடம்பெறுவதில்லையெனவும், ஏனைய பிரதேசங்களில் கிரமமாக குப்பைகள் அகற்றப்படுகின்றபோதிலும் கல்முனை மாநகர சபை பாராமுகமாக இருந்து இப்பிரதேசங்களை புறக்கணிப்பதாகவும் வரியியற்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்முனை நகர பிரதேசத்தில் கிரமமாக குப்பை அகற்றும் நடவடிக்கை இடம்பெறுவதுடன் நகரை அண்டிய மேற்படி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் திட்டமிட்டு மேற் கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் இப்பிரதேச மக்களுக்கு உள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

திட்டவட்ட சூழலுக்கும் பின்பு இரு தடவைகள் மாத்திரமே இப்பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டதாகவும், இவ்வாறு குப்பைகள் அகற்றும் நடவடிக்கை இடம்பெறாததால் வீதிகளிலும் வீட்டு வளாகங்களிலும் குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசுவதுடன் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் இப்பிரதேச மக்கள் சுகாதார துறையினர் இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.