தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் கல்முனையில் நிர்மாணிப்பு
தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரமானது கல்முனை பிரதேச பிரதான மின்
பொறியியலாளர் காரியாலய கட்டடத்தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த
21.01.2026 அன்று கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொதுமுகாமையாளர்
பொறியியலாளர் று.டு.ளு.மு. விஜேதுங்க அவர்களால் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து
வைக்கப்பட்டது.
இத்தானியங்கி இயந்திரம் 24 மணிநேரமும் பாவனையாளர் பயன்படுத்தத்தக்க
முறையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இ ஒரே தடவையில் இரண்டு இலட்சம் ரூபா வரையில்
செலுத்தத்தக்கதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ரூபா 20 தொடக்கம் ரூபா
5000 வரையுமான நாணயத்தாள்களை பயன் படுத்தமுடியுமெனவும்இ புதிதாக புழக்கத்திற்கு
விடப்பட்டுள்ள 2000 ரூபா நாணயத்தாள்களை தற்போது பயன் படுத்த முடியாதெனவும்
தெரிவிக்கப்படுகிறது.
மின்பட்டியலிற்கான கொடுப்பனவை செலுத்த விரும்பும் ஒருவர் சம்பந்தப்பட்ட மின்பட்டியின்
கணக்கிலக்கம் மற்றும் தனது கைத்தெலைபேசி இலக்கம் என்பவற்றை இயந்திரத்தில் பதிந்துஇ
பின்தான் செலுத்தவிரும்பும் தொகையைம் இ உரிய பணத்தையும் செலுத்தும் பட்சத்தில் அது
உடனடியாக துரித கதியில் மின்பட்டியல் நிலுவையில் கழிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு பிராந்தியத்திலே திருகோணமலை பிராந்தியத்திற்கு அடுத்தபடியாக கல்முனை பிராந்திய
மின் பாவனையாளர்களுக்கே இவ்வகை வசதி தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




