( ஸ்ரீவேல்ராஜ்)
கல்முனை அரச ஊழியர் பொழுது போக்கு கழகத்தின் வருடந்த போதுகூட்டம் பதில் தலைவர் நல்லசேகரம் அருளானந்தம் தலைமையில் 2025.12.27 ம் திகதி இடம்பெற்றது.
இதற்கு விஷேட அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் மூத்த நிர்வாக சேவை உத்தியோகத்தரும் முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, காணி அபிவிருத்தி திணைக்கள செயலாளருமான மூ. கோபாலரெட் ணம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது கல்முனை அரச ஊழியர் பொழுது போக்கு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றியீற்றிய விளையாட்டு கழகத்திட்கு வெற்றி கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.











