செல்லையா-பேரின்பராசா
இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறி ( 2024 – 2025) மாணவர்களின் விடுகை விழாவும், இப் பல்கலைக் கழகத்தின் கல்விப் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கணபதிப்பிள்ளை – ஞானரெத்தினத்தின் சேவைநலன் பாராட்டு விழாவும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் இலங்கை திறந்த பல்கலைக் கழக மட்டக்களப்பு பிராந்திய நிலையந்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் கொள்கை, திட்டமிடல், மீளாய்வுக்கான மேலதிக செயலாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாகவும், இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் சிரேஸ்ட உதவிப் பணிப்பாளர் எந்திரி ஏ.டீ.கமலநாதன், வலயக் கல்விப் பணிப்பாளர்களான தினகரன் ரவி (மட்டக்களப்பு) ,சி.சிறிதரன் ( பட்டிருப்பு) ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் விழாவில் இலங்கை திறந்த பல்கலைக் கழக மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் கல்விப் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க. .ஞானரெத்தினத்தின் நாற்பது வருட கால கல்விப் பணியை பாராட்டி பல கௌரவங்கள் அளிக்கப்பட்டதுடன் சைவப் புலவர் பட்டம் பெற்றமைக்காக இவரது துணைவியார் திருமதி ராதா ஞானரெத்தினமும் கௌரவிக்கப்பட்டார்.
இந் நிகழ்வில் அம்பாறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜெயந்திமாலா பிரியதர்சன் ஓய்வு பெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன் தேசகீர்த்தி கலாபூஷணம் எம். திருநாவுக்கரசு உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.










