சங்கர்புரத்தில் விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சங்கர்புரத்தில் அறுவடை விழாவும் விவசாய களப்பாடசாலையில் பங்குபற்றிய விவசாயிகளுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
றாணமடு விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், பாடவிதான உத்தியோகத்தர்களான திருமதி. குந்தவை ரவிசங்கர், திருமதி. நித்தியா நவரூபன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சங்கர்புரத்தை சேர்ந்த விவசாயிகள் 15 பேருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் விவசாய களப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அதனுடைய இறுதி அறுவடை, மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்று அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.














