அரச வேலையை எதிர்பார்க்கும் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களின் சங்கத்தின் மனிதாபிமான இலவச மருந்துவ பணி.

அரசின் கொடுப்பனவுகளோ, சம்பளமோ, ஆதரவோ , உதவியோ இன்றிய நிலையிலும்,
மருத்துவ பட்டதாரிகளான சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களின் சங்கத்தினர்,
வெள்ளம், மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, மனிதாபிமான வைத்திய பணிகளை தங்களின் சங்கத்தின் முயற்சியினால் செய்து வருகின்றனர்.


அந்த வகையில் நேற்று முன்தினம் (5) பசறை யூரி என்னும் இடத்தில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கான மூன்று முகாம்களுக்கு விஜயம் செய்து வைத்திய பரிசோதனைகளை நடாத்தியுள்ளனர்.


மூன்று முகாம்களிலும் இணைந்ததாக சுமார் 1500 மக்களுக்கான மருத்துவ பரிசோதனை இடம்பெற்றுள்ளது.


இதனை ஒட்டியதாக (4) யாழ் ஊடக மையத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொற்றுநோய் தடுப்பு  விழிப்புணர்வு கருத்துக்களும் வழங்கப்படுள்ளது.   
இன்று (6) வவுனியா செட்டிக்குள மக்களுக்கான வெள்ளத்தினால் ஏற்படும் தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நேரடி வழிகாட்டல் இடம்பெற்றுள்ளது.


இதே போல் அடுத்த அடுத்த  வாரங்களில் முல்லைத்தீவு மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வெள்ளத்தின் பின்னரான தொற்று நோய்களை தடுக்கும் விழிப்புணர்வு வழிகாட்டல் நிகழ்வுகளை நடாத்தவுள்ளதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.