கஞ்சிக்குடிச்சாறு மாவீரர்  நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி

பாறுக் ஷிஹான்



அனைத்து தரப்பினரின்   பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள கஞ்சிக்குடிச்சாறு மாவீரர்  நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் பணிக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் கல்முனையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று(24)    நடைபெற்ற வேளை இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

இதன்போது எதிர்வரும் நவம்பர் 27 ஆந் திகதி கார்த்திகை மாதத்தினை முன்னிட்டு மாவீரர் நினைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது.எனவே இந்நிகழ்வில் பொதுமக்கள் மாவீரர் குடும்பங்கள் அரசியல்வாதிகள் மதகுருமார்கள் அனைவரும் கலந்து கொள்ள முன்வருமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றோம்.அம்பாறை மாவட்டம்  திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  27 இல் மாவீரர் நினைவேந்தல் நடைபெறவுள்ளது.இந்த மாவீரர் துயிலும் இல்ல துப்புரவுப் பணிகள்  திருக்கோவில் பிரதேச மாவீரர் குடும்பங்கள்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் அரசியல் கட்சிகள்  ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டதோடு  மேற்படி துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியில் காணப்பட்ட பற்றைப்புதர்களை அகற்றிஇ விழுந்து கிடந்த நினைவுச் சுடர்களை நிறுத்தி வைத்து  துப்புரவுப் பணிகளை மேற்கொண்டிருந்தோம்.எனவே கஞ்சிக்குடிச்சாறு மாவீரர்  நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் பணிக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.