திருமூலர் குரு பூசைகளும் மாணவர்களுக்கான தியான பயிற்சியும் சிறப்பாக நடைபெற்றது
திருமூலர் குருபூசையினை முன்னிட்டு வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயம் ,கல்முனை இராம கிருஸ்ண வித்தியாலயம் ,கல்முனை மாமாங்க வித்தியாலயம் ,திருக்கோவில் அன்னை சாரதா அற நெறிப்பாடசாலையிலும் குருபூசை சிற்பபாக நடைபெற்றது.
இதன்போது மாணவர்களுக்கு மூச்சுப்பயிற்றி தியானம் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வுக்கு யோக வாழ்வு எனும் புத்தகத்தின் ஆசிரியர் முரளிதரன் நவரெட்ணம் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார்.
அத்துடன் மாணவர்களுக்கான நற்சிந்தனைகளையும் பயிற்சிகளையும் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ,ஆசிரிய ஆலோசகர் மா.லக்குணம் ,திருக்கோவில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் நிஷாந்தினி இந்து கலாசார திணைக்கள வளவாளர் சதாதனன் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டன
இந் நிகழ்வுகள் இந்து கலாசார திணைக்களத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.




























