மழ்ஹருஸ் ஷம்ஸ் நிரந்தர அதிபராக றிப்கா நியமனம் 

( வி.ரி.சகாதேவராஜா)

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய நிரந்தர அதிபராக “அதிபர் திலகம்”, “கவித்தீபம்” திருமதி நஸ்ரின் றிப்கா அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நிரந்தர நியமனக்கடிதத்தை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் வழங்கி வைத்தார்.

அச் சமயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்எச்எம்.ஜாபீர் ஏ.சஞ்சீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவரது நிரந்தர நியமனம் தொடர்பாக பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிபர் கவிதாயினி வானம்பாடி திருமதி நஸ்ரின் றிப்கா அன்சார் ஒரு நல்ல கலைஞரும் ஆவார்.